Monday, February 27, 2012

ஒவ்வொரு 80 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு ஐக்கிய அமெரிக்க இராணுவ வீரர் தற்கொலை


27 Feb 2012

வாஷிங்டன்:வாஷிங்டன்னில் ‘தி ஹப்பிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் ‘ராணுவத்தில் தற்கொலை சவால்: போரில் தோல்வி’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் அதன் சேவை உறுப்பினர்கள் பலர் தற்கொலை செய்துக் கொள்வதும், அதற்கு முயற்சி செய்வதும் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய சவாலாகவும், பிரச்சனையாகவும் மாறியுள்ளது. இதை எதிர்கொள்வதில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர்கள் போர் பணியில் இருக்கும்போதே அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
2005-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 36 மணிநேரத்திற்கு ஒரு வீரர் வீதம் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு மட்டும் நடைபெற்ற இரண்டு போர்களில் சுமார்  1,868 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அதிகமானோர் தங்கள் பணியிலிருந்து விலகிச் செல்வதும் அதிகமாகியுள்ளது, மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும்  வாய்ப்பு உள்ளது எனறும் அத்தகவல்கள் தெரிவிக்கிறன.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment