Monday, February 27, 2012

திருக்குர்ஆன் எரிப்பு தாலிபானுடனான பேச்சு வார்த்தையை பாதிக்கும் – ஈரான் தூதர்


27 Feb 2012

காபூல்:அமெரிக்க இராணுவ படையினரால் முஸ்லிம்களின் புனித திருமறையான திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான கொந்தளிப்பு வாஷிங்டன்-தாலிபான் சமாதான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று ஈரான் தூதர் காபூல் பதா ஹூசைன் மாலேகி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அத்துமீறலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததோடு, இவர்களின் இந்த செயலால் அமெரிக்கா மிகுந்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை அவமதிப்பது அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றாலும், இந்த சம்பம்வம் பெரும் எதிர் வினைகளை  விளைவிக்க கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் கத்தாரில் நடக்கவிருக்கும் அமெரிக்கா மற்றும் தாலிபானின் பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றும் ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு ஆஃப்கன் பிரதமர் ஹமீத் ஹர்சாய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா, அதில் இந்த சம்பவம் எந்த உள்நோக்கதுடனும் நடக்கவில்லை என்றும், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கும் ஏற்ப்பட்ட கோபத்தின் காரணமாகவே நடந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரது  மன்னிப்பை ஏற்காத ஆஃப்கன், உடனடியாக அனைத்து வெளிநாட்டு படைகளையும் ஆஃப்கனிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment