Monday, February 27, 2012

ஆப்கான்:அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றவர் போலீஸ் அதிகாரி?

Afghan policeman suspect in killing of US officers
காபூல்:ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகத்தில் 2 அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொலை செய்தவர் போலீஸ் இண்டலிஜன்ஸ் அதிகாரி என்று சந்தேகிப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

25 வயதான அப்துல் ஸபூர் அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொலை செய்துள்ளார் என்றும், அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அப்துல் ஸபூருக்கு கடந்த வாரம்தான் பிஸ்டல் அனுமதிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறுகின்றன. அப்துல் ஸபூரின் குடும்ப உறுப்பினர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. இவரைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக விடுப்பு எடுத்ததை தொடர்ந்து அப்துல் ஸபூர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் உள்துறை அமைச்சகத்தின் இண்டலிஜன்ஸ் பிரிவில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
அதேவேளையில், காபூலில் நேட்டோ ராணுவத்தினர் வெறித்தனமாக புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று குந்தூஸ் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நடத்திய க்ரேனெடு தாக்குதலில் ஏழு அமெரிக்கர்களுக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை உறுதிச்செய்த நேட்டோ உயிர் சேதம் குறித்து தெரிவிக்கவில்லை.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment